சினிமா

8

Published On 2018-03-22 14:52 IST   |   Update On 2018-03-22 14:52:00 IST
ஜே ஸ்டுடியோஸ் இண்டர்நே‌ஷனல் சார்பாக இசை அமைப்பாளர் எம்.ஜான்பீட்டர் கிரியேடிவ் கிளிக் சினிமாஸ் சார்பில் என்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘8’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜே ஸ்டுடியோஸ் இண்டர்நே‌ஷனல் சார்பாக இசை அமைப்பாளர் எம்.ஜான்பீட்டர் கிரியேடிவ் கிளிக் சினிமாஸ் சார்பில் என்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘8’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பரத் கதாநாயகனாக நடிக்கும் இதில் அவருடைய ஜோடியாக பூஜாஜவேரி நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ரோபோ சங்கர், நாக நீடு, தேவதர்ஷினி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சேவியலோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். சந்திரகுமார் படத்தை தொகுக்கிறார். ஸ்ரீதர், நோபல் நடன பயிற்சி அளிக்க, பயர் கார்த்திக், பில்லா ராஜன் சண்டை பயிற்சி அளிக்கிறார்கள்.

ஜான் பீட்டர் இசை அமைக்கும் இந்த படத்துக்கு விவேகா, யுகபாரதி பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய் கவிராஜ். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

“மனிதர்கள் வாழும்போது 8 நிலைகள் உண்டு. அதேபோல் இறந்த பிறகும் 8 நிலைகள் இருக்கிறது. இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இந்த கருவை கதைக்களமாக கொண்டு ‘8’ உருவாகிறது. காதல், காமெடி கலந்து திகில் படமாக தயாராகும் இது, ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்” என்றார்.

Similar News