சினிமா

உத்தரவு மகாராஜா

Published On 2018-03-18 13:50 IST   |   Update On 2018-03-18 13:50:00 IST
உதயாவின் ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை போட்டு நடித்தார்.
உதயாவின் ஜே‌ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை போட்டு நடித்தார். இது இந்த படத்தில் உதயாவின் 5-வது கெட்-அப். இதில் பிரபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, தனஞ்செயன், சோனியா போஸ், எடிட்டர் டான்பாஸ்கோ உள்பட பலர் நடிக்கிறார்கள். 

பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்து குமாரின் பாடல் வரிகளுக்கு நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர் சத்யநாராயணன் எடிட்டிங் செய்கிறார். அறிமுக இயக்குனர் ஆஸிப்குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தின் இறுதிகட்ட கிராபிக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு பிரமாண்டமாக நடந்தது. இதில் ராஜாவுடன் குதிரைகள், படை வீரர்கள், ஏராளமான துணை நடிகர்கள் நடித்தார்கள்.

“படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்ஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். “இந்த படத்தில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகள், நவீன ஒலி அமைப்பு ஆகியவை மிக முக்கியத்துவம் பெற்றுள்ளன” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

Similar News