சினிமா

கோ கோ மாக்கோ

Published On 2018-02-28 08:39 IST   |   Update On 2018-02-28 08:39:00 IST
நடிகர் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் நாயகனாகவும், தனுஷா நாயகியாகவும் நடிக்கும் ‘கோ கோ மாக்கோ’ படத்தின் முன்னோட்டம்.
ரூப் நிறுவனம் சார்பில் கிரி - அருண்காந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘கோகோ மாக்கோ’.

இதில் ராம்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், சரத்குமாரின் அண்ணன் மகன். இவருடைய ஜோடியாக புதுமுகம் தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் சாம்ஸ், ஓய்.ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ், பாண்டு உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சுகுமாரன் சுந்தர், எடிட்டிங்,விஎப் எக்ஸ் - வினோத் ஸ்ரீதர், தயாரிப்பு - கிரி, அருண்காந்த், இசை, ஒலி அமைப்பு, கலர் கலவை, இயக்கம் - அருண்காந்த்.



“நான் ஏற்கனவே ‘இந்த நிலைமாறும்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறேன். அது விரைவில் வெளியாகிறது. இது 2-வது படம். அந்த படத்தில் நாயகனாக நடித்த ராம்குமார் இதிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஜீப் பயணத்தின் போது ஏற்படும் காதலை திரில்லருடன், விளையாட்டுத் தனம் கலந்து வித்தியாசமான கோணத்தில் கொடுக்க இருக்கிறோம். இது தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத கதையம்சம் கொண்ட படம். முழுவதும் கடற்கரை பகுதியில் படமாகிறது.

குறைந்த பட்ஜெட்டில் ஸ்டைலிஷ் ஆக எடுக்கப்பட்ட பிரமாண்ட படமாக தெரியும். இதற்கான புதிய விதிமுறையை பயன்படுத்துவோம். ‘கோ கோ மாக் கோ’ என்பது ஒரு இசை ஆல்பத்தின் பெயர். இந்த படத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் கோவை இளைஞர்கள். காதலர் தினத்தில் பட பூஜை நடந்தது. மார்ச்சில் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது”.

Similar News