சினிமா
முருகலிங்கம் இயக்கத்தில் டி.வி. புகழ் ஜெகன் போலீசாக நடிக்கும் ‘எனக்கு இன்னம் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.
முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜாமணி தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’.
இந்த படத்தில் கதாநாயகனாக நகைச்சுவை நடிகர் ஜெகன் நடிக்கிறார். அவருடைய ஜோடியாக மோனிகா நடிக் கிறார். இவர்களுடன் கவிஞர் பிறைசூடன், சேரன்ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். லட்சுமி என்ற பசுமாடு கதைக்கு முக்கியத் துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறது.
ஒளிப்பதிவு - ஆர்.சிவராஜ், இசை - கே.ஆர்.கவின் சிவா, எடிட்டிங் - துரைராஜ், நடனம் - ராதிகா, கலை - ராகவாகுமார், பாடல்கள் - பிறைசூடன், காரைக்குடி நாராயணன், கதை, திரைக்கதை, வசனம் - காரைக்குடி நாராயணன், தயாரிப்பு - ராஜா மணி தியாகராஜன், இயக்கம் - முருகலிங்கம்.
“ கதைப்படி கந்து வட்டி கொடுப்பவர் மகளை ஒரு பத்திரிகையாளர் காதலிக் கிறார். இதையறிந்த கந்து வட்டிக்காரர் தனது அடியாட்களை அனுப்பி மகளின் காதலனை கொலை செய்ய முயற்சிக்கிறார். காதல் ஜோடி தப்பி ஓடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைகிறது. பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் ஜெகன், ஏட்டு ரவி ஆகியோர் காதல் ஜோடிக்கு பதிவு திருமணம் செய்து போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலேயே முதலிரவை கொண்டாட வைக்கிறார்கள். போலீஸ் நிலையத்துக்கே விடுமுறை விடுகிறார்கள். இது போல் பலவிதமான நகைச்சுவை காட்சிகள் கொண்ட படம் இது” என்றார்.