சினிமா

காட்டுபய சார் இந்த காளி

Published On 2018-02-23 14:56 IST   |   Update On 2018-02-23 14:56:00 IST
யுரேகா இயக்கத்தில் ஜெய்வந்த் - ஐரா நடிப்பில் தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை கேட்கும் ‘காட்டுபய சார் இந்த காளி’ படத்தின் முன்னோட்டம்.
ஒயிட் ஹவுஸ் சினிமாஸ் யுரேகா சினிமா ஸ்கூலுடன் இணைந்து வழங்கும் படம் ‘காட்டுபய சார் இந்த காளி’.

இதில், ஜெய்வந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐரா நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், யோகி தேவராஜ், முத்தையா கண்ணதாசன், எமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை - விஜய் சங்கர், ஒளிப்பதிவு - மணி பெருமாள், படத்தொகுப்பு - வில்சி, கலை - மோகன மகேந்திரன், சண்டைப்பயிற்சி - பிரபு சந்திரசேகர், நடனம் - பூபதி, பாடல்கள் - பிறை சூடன், யுகபாரதி, யுரேகா, தயாரிப்பு - வி.ஜி. ஜெய்வந்த், இயக்கம் - யுரேகா.



படம் பற்றி அவரிடம் கேட்ட போது....

“ எனது 4-வது படமான இது ஒரு சோஷியல் திரில்லர் கதை. வடமாநில பொருளாதார கொள்கையால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சமுதாய ரீதியாக கந்து வட்டி, கார்ப்பரேட் வட்டி என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தமிழர்களுக்கு தன்மானம் பாதிக்கப்படுகிறது. அது எப்படி என்பது பற்றி இந்த படம் பேசுகிறது. இதில், நாயகன் போலீஸ் அதிகாரி. ரவுடி போலீஸ் போன்ற பாத்திரம். முழுக்க முழுக்க இரவில் எடுக்கப்பட்ட படம். 

தமிழ்நாட்டில் தமிழருக்கு உரிமை கேட்கும் இந்த படத்தின் மூலம் சர்ச்சைகள் வரலாம். என்றாலும், இது மக்களுக்கு சமூக ரீதியில் நல்ல செய்தி சொல்லும் படம். நாயகன் ஜெய்வந்த், நாயகி ஐரா சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சீமான் சிறப்பு வேடத்தில் வருகிறார். ‘காட்டு பய சார் இந்த காளி’ மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம்” என்றார்.

Similar News