சினிமா

மதம்

Published On 2018-02-06 09:19 GMT   |   Update On 2018-02-06 09:19 GMT
ரஜ்னி இயக்கத்தில் புதுமுகங்கள் விஜய் ஷங்கர், ஸ்வாதிஷ்தா நடிப்பில் முழுக்க முழுக்க தூத்துக்குடியில் படமான மதம் படத்தின் முன்னோட்டம்.
காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் எம்.ஹரிஷ் குமார் தயாரித்துள்ள படம் மதம். 

விஜய் ஷங்கர், ஸ்வாதிஷ்தா நாயகன், நாயகியாக அறிமுகமாகும் இந்த படத்தில் ஜான் செல்வாசிங், உதய் குமார், எல்ஷடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, எஸ்.எம்.பிபி. தினகரன், ஜி.எம்.பாட்ஷா, ஜோதி குமார், வித்யா, விபிதா, இசைசெல்வி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இசை - நிரோ, படத்தொகுப்பு - சி.சாந்தகுமார், ஒளிப்பதிவு - செந்தில்குமார்.கே, கலை இயக்குநர் - பாலாஜி, இணை இயக்குநர் - கருப்பையா ராதா கிருஷ்ணன், துணை இயக்குநர்கள் - விஷ்ணு குமார்.ஆர், உதய் குமார், வெங்கடேஷ்.பி.கே, கதை, திரைக்கதை, இயக்கம் - ரஜ்னி.



படம் குறித்து இயக்குநர் பேசும் போது, 

மதம் என்பது யானையின் வெறியை குறிப்பது. பணத்திற்காக எதையும் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு குடும்பமும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இது முழுமுழுக்க தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ளது. நடிக்க விருப்பமுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த பலரில், குறிப்பிட்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம். இதில் 20 பேர் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக 80 வயதுமிக்க மூதாட்டி ஒருவர் படம் முழுக்க வரும்படியான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

தெரிந்த முகங்கள் என்றால் திரையில் பார்க்கும் போது அவர்களது கதாபாத்திரம் எந்தமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தும், அவர்களின் ரோல் என்ன என்பது தெரிந்துவிடும். புதுமுகங்கள் நடிப்பதால் அவர்களது கதாபாத்திரத்தை கணிக்க முடியாது என்பதால் அது எனக்கு பலமாகும். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. குறிப்பாக படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சி என எதுவும் இல்லாமல் யதார்த்தமாக உருவாக்கியிருக்கும் இந்த படத்தை மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்.

படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்றார். 



Tags:    

Similar News