சினிமா

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

Published On 2018-01-30 10:57 IST   |   Update On 2018-02-02 14:27:00 IST
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் முன்னோட்டம்.
'7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நாயகர்களாகவும், காயத்ரி, நிகாரிகா கொனிதலா நாயகிகளாகவும் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், டேனியல் அனி போப், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஸ்ரீ சரவணன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், ஸ்டண்ட் - டான் அசோக், நடனம் - கல்யாண், தயாரிப்பு - ஆறுமுககுமார், கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து. இயக்கம் - ஆறுமுககுமார்.



படம் பற்றி அவர் கூறிய இயக்குநர், 

“இது விஜய்சேதுபதிக்கு பெயர் சொல்லும் வித்தியாசமான படம். அட்வெஞ்சர் காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில், விஜய்சேதுபதி ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இனத்தலைவராக நடித்திருக்கிறார். 8 வெவ்வேறு தோற்றங்களில் கலக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் இயக்குனராக மட்டுமல்ல விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை நான் ரசித்தேன். இதில் அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது. இன்னொரு நாயகனாக கவுதம் கார்த்திக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது அனைவரும் ரசித்து மகிழும் படமாக உருவாகி இருக்கிறது”. என்றார். 

படம் வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி ரிலீசாகிறது. 

Similar News