சினிமா

கருத்துக்களை பதிவு செய்

Published On 2018-01-27 17:53 IST   |   Update On 2018-01-27 17:53:00 IST
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரி - உபாஷ்ணா ராய் நடிப்பில் உருவாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தின் முன்னோட்டம்.
ஆர்.பி.எம்.சினிமாஸ் நிறுவனம் ‘ஜித்தன் 2’ , ‘1 ஏஎம்’ படங்களை தயாரித்து வெளியிட்டது. அடுத்ததாக இந்த நிறுவனம் ஒரு குறுகிய கால தயாரிப்பாக ‘கருத்துக்களை பதிவு செய்’ என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் லட்சிய நடிகர் என்று போற்றப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறுகிறது.

ஒளிப்பதிவு - மனோகர், இசை - கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் - சொற்கோ, கலை - மனோ, நடனம் - எஸ்.எல்.பாலாஜி, ஸ்டண்ட் - ஆக்‌‌ஷன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம் - ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான ‘யா யா’ படத்தை இயக்கியவர். விரைவில் வெளிவர உள்ள ‘பாடம்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். தயாரிப்பு, இயக்கம் - ராகுல்.



படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது.

“ இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை. சமூக வலைதளங்களினால் தவறான பாதைக்கு போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஒரே கட்டத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக ‘கருத்துக்களை பதிவு செய்’ இருக்கும்” என்றார்.

Similar News