சினிமா

தானா சேர்ந்த கூட்டம்

Published On 2018-01-08 10:45 IST   |   Update On 2018-01-08 10:45:00 IST
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முன்னோட்டம்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம் `தானா சேர்ந்த கூட்டம்'.

நாயகன், நாயகியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. 

இசை - அனிருத், ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், படத்தொகுப்பு - ஏ ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, சூர்யா, தயாரிப்பு நிறுவனம் - ஸ்டூடியோ கிரீன், வெளியீடு - பரதன் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - விக்னேஷ் சிவன்.



படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சூர்யா பேசும் போது,

விக்னேஷ் சிவனை சந்திக்கப் போவதாக ஹரி சாரிடம் கூறினேன். அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கபட்டது என்றாலும், அதை மையாக வைத்து தான் `ஸ்பெஷல் 26' என்ற படம் உருவானது. முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கின்றது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது, அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார்.

படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

Similar News