சினிமா

யாழ்

Published On 2017-11-18 11:29 GMT   |   Update On 2017-11-18 11:29 GMT
எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் ஈழத்தமிழ் வசனத்தில் உருவாகும் ‘யாழ்’ படத்தின் முன்னோட்டம்.
மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’.

இந்த படத்தில் டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக நீலிமா, லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக ரக்‌ஷனா மற்றும் ஈழத்து கலைஞர்கள் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு - ஆதி கருப்பையா, நசீர், இசை - எஸ்.என்.அருணகிரி, படத்தொகுப்பு - ட.எ.ம.தாஸ், கலை - ரெம்போன் பால்ராஜ்.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - எம்.எஸ்.ஆனந்த், படம் பற்றி கூறிய அவர்...

“‘யாழ்’ திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த படத்தின் கதை, ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்தும் ஈழத்தமிழர்களே.



படத்தின் பாடல்கள் ஈழத் தமிழில் இருக்கும். பாட லாசிரியர்களும் இலங்கை தமிழர்களே. வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே இருக்கும்.

‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்கள் பயன்படுத்திய ஒரு இசைக்கருவி. பாணர்கள் தமிழர் களின் கலை, கலாசாரத்தை, பண்பாட்டை ஊர் ஊராக சென்று பரப்பியதால் தான் யாழ்ப் பாணம் என்ற பெயர் வந்தது.

யாழ்ப்பாண கலாசார கதாபாத்திரங்களுக்கு இடையில் இறுதிப்போரின் போது அவர்களுக்குள் நடந்த நட்பு, காதல் போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம்” என்றார்.

Tags:    

Similar News