சினிமா

பக்கா

Published On 2017-10-12 02:42 GMT   |   Update On 2017-10-12 02:42 GMT
எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு - நிக்கி கல்ராணி - பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வரும் ‘பக்கா’ படத்தின் முன்னோட்டம்.
‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.

இதில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - எஸ்.சரவணன், இசை - சி.சத்யா , பாடல்கள் - யுக பாரதி, கபிலன், கலை - கதிர், நடனம் - கல்யாண், தினேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், எடிட்டிங் - டி.சசி குமார், தயாரிப்பு - டி.சிவகுமார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.எஸ்.சூர்யா



படம் பற்றி விக்ரம் பிரபு கூறியதாவது...

“திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் கிரிக்கெட் வெறியன்.

ரஜினிகாந்த் பெயரில் ரசிகர் மன்றம் வைத்திருப்பவர் நிக்கி கல்ராணி. கிராமத்து பெரிய மனிதர் மகள் பிந்து மாதவி. இந்த 3 பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான ‘பக்கா’ படம். இது வரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு. கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் டி.சிவகுமார், “‘பக்கா’ நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக இருக்கும். படத்தில் நான் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறேன்” என்று கூறினார்.

Tags:    

Similar News