சினிமா

குயின்

Published On 2017-06-23 03:02 GMT   |   Update On 2017-06-23 03:02 GMT
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படும் ‘குயின்’ படத்தின் முன்னோட்டம்.
வியாம்காம் 18 மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியில் தயாரித்த படம் ‘குயின்’.

கங்கனா ரணாவத் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விகாஸ் பாஹல் டைரக்டு செய்தார். லண்டனை சேர்ந்த கோல்டன் கிரேம் நிறுவனம் இந்த படத்தை தென் இந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை வியாம்காம் 18 மோ‌ஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இணை தயாரிப்பாக ஸ்டார் மூவீஸ் நிறுவனத்தை சேர்ந்த நடிகர் தியாகராஜனிடமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தமிழில் ‘வானில் தேடி நின்றேன்’ என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. நாயகியின் தந்தையாக நாசர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதுபற்றி கூறியுள்ள கோல்டன் கிரேப் நிறுவனம்...

‘நாங்கள் ஏற்கனவே பாலிவுட் நிறுவனத்திடமிருந்து ‘குயின்’ படத்தின் உரிமைகளை வாங்கி நட்சத்திர தேர்வில் ஈடுபட்டு வருகிறோம். பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டோடு (பி.எப்.ஐ) எல்லா மொழிகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன. வேறு யாரும் பதிவு செய்யவோ, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவோ முடியாது. எனவே மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் ரீமேக் செய்வதற்கு உரிமை கொண்டாட முடியாது. விரைவில் எங்கள் தரப்பிலிருந்து இந்த படம் பற்றிய அறிவிப்பு வரும்’ என்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News