சினிமா

லெமூரியா

Published On 2017-06-09 10:13 GMT   |   Update On 2017-06-09 10:13 GMT
லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர்களின் கணக்கில் அடங்காத வரலாற்று சாதனைகளை கொண்ட ‘லெமூரியா’ படத்தின் முன்னோட்டம்.
லெமூரியா கண்டத்தில் தோன்றிய தமிழர்களின் கணக்கில் அடங்காத வரலாற்று சாதனைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக இருக்கும் படம் ‘லெமூரியா’ . இந்த படத்தை ரவீந்திரா தனது எஸ்.ஆர்.சாய் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எழுதி, இயக்கி, தயாரிக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய ரவீந்திரா....

“ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி தமிழில் சாஸ்திரங்களை எழுதியதும், முதல் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியதும் லெமூரியா தமிழர்கள் தான். தமிழ் நாகரீகம், லிங்கவழி பாடு, அறிவியல் சாஸ்திரங்கள் போன்றவை இன்று உலகம் முழுதும் பரந்து விரிந்ததும் இந்த லெமூரியா கண்டத்தில் இருந்து தான். அவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ‘லெமூரியா’ திரைப்படத்தை இன்றைய காலகட்ட இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் எழுதி, இயக்கி தயாரிக்க இருக்கிறேன்”.



உலக அரங்கில், இந்திய ஆக்கசக்தி சாஸ்திரங்களை திருடிப் போய் அழிவு சக்திக்கு பயன்படுத்தி வரும் சில நாடுகளிடமிருந்து அந்த சாஸ்திரங்களை திரும்ப பெற்று வந்து இந்தியாவை ஆக்க சக்திக்கு மீண்டும் அழைத்து செல்வதே “லெமூரியா” படக் கருவாகும். தற்போது, இந்த படத்திற்கான நட்சத்திர, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ‘லெமூரியா’ படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

Tags:    

Similar News