சினிமா

மாம்

Published On 2017-05-31 04:52 IST   |   Update On 2017-05-31 04:52:00 IST
ரவி உத்யவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்துள்ள 300-வது படமான ‘மாம்’ படத்தின் முன்னோட்டம்.
ரசிகர்களை திறமையான நடிப்பாலும் அழகாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி. சினிமா துறையில் இவர் காலூன்றி 50 வருடங்கள் ஆகிறது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் ‘துணைவன்’ என்ற படத்தின் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300வது படமாக ‘மாம்’ வெளியாகவுள்ளது.

ஸ்ரீதேவியின் 50 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் ‘மாம்’ படத்தை வருகிற ஜுலை 7-ந்தேதி அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.



இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் ஸ்ரீதேவி டப்பிங் பேசுகிறார்.

‘மாம்’ திரைப்படத்தை ஸீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க எமேட் பிலிம்ஸ் அண்ட் தேர்டு ஐ புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளனர். இந்த படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘மாம்’ விரைவில் திரைக்கு வருகிறது.

Similar News