சினிமா

தெருநாய்கள்

Published On 2017-05-14 14:05 IST   |   Update On 2017-05-14 14:05:00 IST
ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியே‌ஷன்ஸ் தயாரிப்பில் எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்க்கும் ‘தெருநாய்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியே‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. இந்த படத்தில் அப்புகுட்டி, பிரதிக், ‘கோலிசோடா’ நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், கூல்சுரேஷ், சம்பத்ராம், பவல், ஆறுபாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் நடித்துள்ளனர். புதுமுகநாயகி அக்‌ஷதா இதில் அறிமுகமாகியுள்ளார்.

ஒளிப்பதிவு- தளபதி ரத்தினம், இசை- ஹரிஷ், சதீஷ், எடிட்டிங்- மீனாட்சி சுந்தர், பாடல்கள்-மாஷா (சகோதரிகள்),முத்தமிழ், ஜி.கே.பி.லலிதானந்த், தயாரிப்பு-சுசில்குமார், இணைதயாரிப்பு-உஷா, இயக்கம்-புதுமுக இயக்குனர் செ.ஹரிஉத்ரா. படம் பற்றி இயக்குனர் கூறும் போது...



“டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான கார்ப்பரேட் நிறுவனங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் பதிவாக இந்த படத்தின் கரு அமைந்துள்ளது. கார்பரேட் அரசியலின் வளர்ச்சி... சமுதாயத்தின் வீழ்ச்சி என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளது” என்றார். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை முதலிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘தெரு நாய்கள்’ படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

Similar News