சினிமா

பச்சே கச்சே சச்சே

Published On 2017-05-11 10:40 IST   |   Update On 2017-05-11 10:40:00 IST
சமூக சேவகர் அன்னாஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகளின் லட்சிய கனவு படமான ‘பச்சே கச்சே சச்சே’ படத்தின் முன்னோட்டம்.
சமூக சேவகர் அன்னாஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பச்சே கச்சே சச்சே’.

எல்லா குழந்தைகளுக்கும் ஒரு கனவு உண்டு. டாக்டரோ விஞ்ஞானியோ அல்லது யாரும் நினைக்காததை சாதிக்க வேண்டும் என்ற ஆசையோ இருக்கும்.

அதன்படி குழந்தைகள் பள்ளிப் பருவத்தில் விளையாட்டு, பேச்சு என்றில்லாமல் தனது இலக்கினை எப்படி அடைகிறார்கள் என்பதை காட்டும் விதமாக ‘பச்சே கச்சே சச்சே’ படம் உருவாகி இருக்கிறது.

இதில், அன்னா ஹசாரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏக்தா சிங், ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, லோகஷிட் பட்நாயக், யாஷ்சுக், அபிஷேக் ஜீத்வா, நிக்குஞ் பொன்டய்யா, துர்வேஷ் எஸ்.பராப், நிஷி காந்த், ஆதிப் உள்பட பலர் நடிக்கின்றனர்.



ஒளிப்பதிவு-ஜெய் நந்தன்குமார், இசை-ரவி சங்கர், பாடல்கள்-மீனா உதாண்டா, வெங்க டேஷ்வரா, தயாரிப்பு- மீனா உதாண்டா, ரவிசதாசிவ், இயக்கம்- ரவி சதாசிவ்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்தி மொழியில் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளிவர உள்ளது. தமிழில் மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Similar News