சினிமா

ஜெட்லி

Published On 2017-05-02 02:08 GMT   |   Update On 2017-05-02 02:08 GMT
ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உலக அரசியலை சொல்லும் ‘ஜெட்லி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஜெட்லி’. ஆடு,மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை ஆகியவற்றை வைத்து படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் வெள்ளைப் பன்றியை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘ஜெட்லி’.

உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக ‘ஜெட்லி’ உருவாகி வருகிறது.

இதில், முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ்பவன், நைப் நரேன், நிப்பு, ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் யார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். ஒளிப்பதிவு- துலிப்குமார், இசை-சி.சத்யா பாடல்கள்- வைரமுத்து, கலை- குருராஜ், ஸ்டண்ட் - நைப் நரேன், எடிட்டிங்-பால்ராஜ் .



கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம்- ஜெகன்சாய். படம் பற்றி கூறிய அவர்...,

“இது காமெடி படம் மட்டுமல்ல.. உலக அரசியலை சொல்லும் படம். அண்டை நாடுகள் எதுவும் பக்கத்து நாடுகளின் மீதுள்ள அக்கறையால் மட்டும் அன்புக்கரம் நீட்டுவதில்லை.. அது அவர்களது வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கமே என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது” என்றார்.
Tags:    

Similar News