OTT

இந்த வார ஓடிடி ரிலீஸ்

Published On 2025-07-09 23:12 IST   |   Update On 2025-07-09 23:12:00 IST
  • ஷ்ரத்தா ஶ்ரீனாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கலியுகம் திரைப்படம்.
  • கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து மூன்வாக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களுக்கு பிடித்த மொழியில் பார்த்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்பதை இச்செய்தியில் பார்க்கலாம்.

கலியுகம்

ஷ்ரத்தா ஶ்ரீனாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது கலியுகம் திரைப்படம்.இப்படம் ஒரு டிஸ்டோபியன் உலகத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகியுள்ளது.இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கலியுகம் படத்தை அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார்.

டான் வின்சண்ட் இசையை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நரிவேட்டை

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் நரிவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இப்படமே சேரன் நடித்த முதல் மலையாள திரைப்படமாகும். இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மூன்வாக்

கேரளாவில் பிரேக் டான்ஸ் கற்றுக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து மூன்வாக் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வினோத் ஏ.கே இயக்கியுள்ளார்.இப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அருநாத், சிபி குட்டப்பன் மற்றும் சுஜித் பிரபஞ்சன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Mr & Mrs Bachelor

மலையாள இளம் நடிகையான அனஸ்வர ராஜன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது Mr & Mrs Bachelor திரைப்படம். ஒரு பணக்கார வீட்டு பெண் அவளது திருமணத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடி விடுகிறாள். அப்போது எதிர்பாராத விதமாக இவர் இந்திரஜித் சுகுமாரனை சந்திக்கிறார். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Mr Rani

ராஜா என்பவர் கதாநாயகனாக ஆக ஆசைப்படுகிறார். ஆனால் அவர் நாயகியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இப்படத்தில் தீபக் சுபிரமன்யா மற்றும் பார்வதி நாயர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கன்னட மொழி திரைப்படம் லயன்கேட்ஸ் பிளே ஓடிடி தளத்தில் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிறது.

8 Vasantalu

அனந்திகா சனில்குமார் , ரவி டுக்கிர்லா மற்றும் ஹனு ரெட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது 8 Vasantalu என்ற தெலுங்கு திரைப்படம். இப்படத்தை பனின்ற நர்செட்டி இயக்கியுள்ளார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Tags:    

Similar News