சினிமா
null

'The GOAT' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Published On 2024-01-15 07:53 GMT   |   Update On 2024-01-15 09:19 GMT
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் 'G.O.A.T' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
  • விஜய், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்ற புதிய போஸ்டர் இணையத்தில் வைரல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கவச உடை மற்றூம் கையில் துப்பாக்கியுடன் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பு வெளியான முதல் போஸ்டரில் வயதான மற்றும் இளம் தோற்றங்களில் விஜய் விமானப் படை வீரர் உடையுடன் தோன்றியிருந்தார். இதன் அடிப்படையில் இப்படம் ராணுவ பின்னணி கொண்ட படமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது. மேலும் இது காலப் பயணம் சார்ந்த திரைப்படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News