சினிமா
கிசுகிசு

ஓவர் பந்தா காட்டும் நடிகர்

Published On 2021-10-11 21:41 IST   |   Update On 2021-10-11 21:41:00 IST
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்த நடிகர் தற்போது ஓவர் பந்தா காண்பித்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் பெரிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்த நடிகர், சமீபத்தில் பெரிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானாராம். நடிகரின் நடிப்புக்கு பல பாராட்டுகள் குவிந்ததாம். புகழ், பாராட்டுகள் குவிந்ததால், தான் பெரிய நடிகர் ஆகிவிட்டோம் என்று நினைத்துவிட்டாராம்.

தனக்கு மேனேஜர், உதவியாளர் என்று பலரை ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம். தனக்கு வரும் போன் அழைப்புகளை எடுக்காமல் ஓவர் பந்தா காண்பித்து வருகிறாராம். இதையறிந்த பலர், ஒரு படம்தானே வந்திருக்கு அதுக்குள்ள இப்படியா... என்று நடிகரை பற்றி பேசி வருகிறார்களாம்.

Similar News