சினிமா செய்திகள்
null

சாவீ- திரைவிமர்சனம்

Published On 2025-12-07 14:36 IST   |   Update On 2025-12-07 14:49:00 IST
காணாமல் போகும் பிணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சாவீ.

நாயகன் உதய தீப், தனது தந்தையை 2 மாமன்கள் கொலை செய்துவிட்டதாக இருவரையும் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாமனின் மகளை காதலித்து வரும் உதய தீப் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்.

இந்த நேரத்தில் மாமன் ஒருவர் விபத்தில் மரணம் அடைகிறார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மாமனின் உடல் காணாமல் போகிறது. பிணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதேஷ்பாலாவும் குடும்பத்தினரும் தீவிரமாக தேடிக் கொண்டிருந்தபோது இன்னொரு மாமனும் திடீரென மரணமடைகிறார்.

இறுதியில் காணாமல் போன மாமனின் உடல் கிடைத்ததா? இன்னொரு மாமன் எப்படி இறந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உதய தீப் இயல்பாகவும் காமெடி கலந்தும் நடித்துள்ளார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ஆதேஷ்பாலா காணாமல் போன பிணத்தையும் இன்னொரு மாமன் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தும் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், மாஸ்டர் விஜய், கவிதா சுரேஷ், பிரேம், கே.சேஷாத்திரி ஆகியோர் நடிப்பு படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

இயக்கம்

காணாமல் போகும் பிணத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்டனி அஜித். ஆரம்பத்தில் புரியாமல் செல்லும் திரைக்கதை, இறுதியில் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள போதை கலாச்சாரம் பற்றி பேசியிருப்பது சிறப்பு. இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

இசை

சரண் ராகவன், வி.ஜே.ரகுராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

ஒளிப்பதிவு

பூபதி வெங்கடாசலத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

ரேட்டிங்- 2.5/5

Tags:    

Similar News