சினிமா
கிசுகிசு

தீவிரமாக கதாநாயகியை தேடும் நடிகர்

Published On 2021-09-30 16:36 GMT   |   Update On 2021-09-30 16:36 GMT
பிரபல வாரிசு நடிகருடன் நடிக்க மாட்டோம் என முன்னணி நடிகைகள் தெரிவித்து விட்டதால், இரண்டாம் நிலை ஹீரோயின்களை தேடி வருகிறாராம்.
அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகர் ஒருவர், திரையுலகில் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தாராம். இவர் இவ்வாறு நடிக்க இவர் தந்தை தான் காரணம் என சொல்கிறார்கள். ஏனெனில் அவர் மிகப்பெரிய தயாரிப்பாளராம். 

இப்படி ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாய் வளர்ந்து வந்த அந்த நடிகர், தற்போது ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாராம். ஏனெனில் அவர் அடுத்ததாக நடிக்கப்போவது பாலிவுட் படமாம். அதில் நாங்கள் நடிக்க மாட்டோம் என முன்னணி நடிகைகள் தெரிவித்து விட்டதால், இரண்டாம் நிலை ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.
Tags:    

Similar News