சினிமா
கிண்டல் செய்ததால் கோபப்பட்ட நடிகை
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகையை சிலர் கிண்டல் செய்ததால் கோபப்பட்டு ஒரு செயலை செய்திருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான பெத்தான நடிகை, தனக்கு திறமை இருந்தும் ஏன் பட வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்பி வந்தாராம். நடிகையை பார்த்த ஒரு சிலர் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று கிண்டல் செய்தார்களாம்.
இதனால், கோபப்பட்ட நடிகை அதை சீரியசாக எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்து இருக்கிறாராம். கிண்டலுக்கெல்லாமா உடல் எடையை குறைப்பார் என்று தற்போது பலரும் பேசி வருகிறார்களாம். இனிமேலாவது நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.