சினிமா
கிசுகிசு

நடிகரை தொந்தரவு செய்து வாய்ப்பை பிடித்த நடிகை

Published On 2021-03-11 14:59 IST   |   Update On 2021-03-11 14:59:00 IST
பிரபல நடிகரை தொடர்ந்து தொந்தரவு செய்து அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை ஒரு நடிகை பெற்றிருக்கிறாராம்.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் திருமணத்திற்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து கணவருடன் செட்டிலாகி இருந்தாராம். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலரின் வற்புறுத்தலினால் ஒரு சில படங்களில் நடித்தாராம்.

இதைப்பார்த்த பலரும் நடிகைக்கு வாய்ப்பு கொடுத்தார்களாம். ஆனால், அந்த படங்கள் எல்லாம் சரியாக ஓடவில்லையாம். இதனால், தன்னுடன் அந்த காலத்தில் நடித்தவர்களிடம் போன் செய்து வாய்ப்பு கேட்டு வந்தாராம். அதன்படி நடிகர் ஒருவரை தொடர்ந்து தொந்தரவு செய்து புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் நடிகை.

Similar News