சினிமா
கிசுகிசு

நடிகையின் வாய்ப்பை தட்டி பறிக்க நினைக்கும் நடிகை

Published On 2021-01-29 23:29 IST   |   Update On 2021-01-29 23:29:00 IST
இளம் நடிகையின் வாய்ப்பை மற்ற நடிகை ஒருவர் தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ராசியான நடிகை, உச்ச நடிகர்களுடன் ஜோடி போட வேண்டும் என்று ஆசையுடன் இருந்து வருகிறாராம். இந்நிலையில் தெலுங்கில் பட வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று விட்டாராம்.

இதற்கிடையில் இளம் நடிகை ஒருவர் அடுத்து அடுத்து இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி விட்டாராம். இதைக்கண்ட நடிகை, இளம் நடிகையின் வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்து வருகிறாராம். இளம் நடிகைக்கு கிடைத்த வாய்ப்பை தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம் நடிகை.

Similar News