டோலிவுட், கோலிவுட் என பிசியாக நடித்து வரும் நடிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்ய செல்லி வற்புறுத்துகிறார்களாம்
திருமணம் செய்யச் செல்லி பிரபல நடிகையை வற்புறுத்தும் பெற்றோர்
பதிவு: ஜனவரி 17, 2021 19:06
கிசுகிசு
அக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தமிழ் படங்களில் நடித்து பாப்புலர் ஆனாலும், தற்போது பிற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் சந்தோஷப்பட வில்லையாம். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான் என்கிறார்கள்.
அந்த நடிகையை திருமணம் செய்யச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்களாம். திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் வருமா?, திருமணத்துக்கு பின் படத்தில் நடிக்க அனுமதிப்பார்களா? என்ற குழப்பத்தில் அந்த நடிகை உள்ளாராம்.