சினிமா
கிசுகிசு

கவர்ச்சி படங்களை அனுப்பி நடிக்க சான்ஸ் கேட்கும் நடிகை

Published On 2020-12-06 18:42 IST   |   Update On 2020-12-06 18:42:00 IST
அக்கட தேசத்தில் இருந்து கோலிவுட் பக்கம் வந்துள்ள இளம் நடிகை ஒருவர், கவர்ச்சி படங்களை அனுப்பி நடிக்க சான்ஸ் கேட்டு வருகிறாராம்.
தயாரிப்பாளர்களுக்கு தனது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை அனுப்பி நடிகைகள் வாய்ப்பு கேட்பது முன்னொரு காலத்தில் நடந்து வந்ததாம். அந்த வழக்கம் நாளடைவில் மாறி, நடிகைகள் நேரில் சென்று ‘சான்ஸ்’ கேட்பது நடைமுறையானது. சமீபகாலமாக மும்பையில் இருந்து வந்து சென்னையில் முகாமிட்டுள்ள சில நடிகைகள் புகைப்படங்களை அனுப்பி வாய்ப்பு வேட்டையாடும் வழக்கம் மீண்டும் வந்திருக்கிறதாம்.

இப்படி பழைய நடைமுறையை பின்பற்றுவதில் இளம் நடிகை ஒருவர் முதல் இடத்தில் இருக்கிறாராம். இவர் படுகவர்ச்சியாக தன்னை போட்டோ எடுத்து பட நிறுவனங்களுக்கு அனுப்பி வருவதாக பேசப்படுகிறது. வம்பு நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ள அந்த நடிகையின் இந்த முடிவு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம். 

Similar News