சினிமா
கிசுகிசு

தூதுவிடும் நடிகைகள்.... தெறித்தோடும் நடிகர்

Published On 2020-11-16 15:04 IST   |   Update On 2020-11-16 15:04:00 IST
பழைய நட்பை புதுப்பிக்க நடிகைகள் ஆர்வம்காட்டி வருவதால், மூன்றெழுத்து நடிகர் ஒருவர் அவர்களை கண்டால் தெறித்தோடுகிறாராம்
மூன்றெழுத்து நடிகர் ஒருவர், தற்போது ஆளே மாறிவிட்டாராம். படப்பிடிப்புக்கு ஆப்சென்டே ஆகாமல் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறாராம். இந்த விஷயம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க அவர் இவ்வாறு செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறதாம். புதிய பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகிறதாம். வந்ததுக்கெல்லாம் ஓகே சொல்லாமல் ஒவ்வொரு படத்தையும் மிக கவனமாகத் தேர்ந்தெடுக்கிறாராம்.

இந்த சூழலில் அவருடன் நடித்த முன்னாள் நடிகைள் சிலர், நடிகரை தொடர்பு கொண்டு பழைய நட்பை புதுப்பிக்க ஆர்வம்காட்டி வருகிறார்களாம். ஆனால் அவர்களை கண்டால் தெறித்தோடும் அந்த நடிகர், இனி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது என உறுதியாக இருக்கிறாராம்.

Similar News