சினிமா
கிசுகிசு

நடிகையின் வரவால் கலக்கத்தில் இருக்கும் நடிகை

Published On 2020-10-15 22:06 IST   |   Update On 2020-10-15 22:06:00 IST
நடன இயக்குனரும் நடிகையுமானவர் தற்போது பிரபலமான நடிகையின் வரவால் கலக்கத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனரும், நடிகையாகவும் வலம் வந்தவர் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று பிரபலமானாராம். பின்னர் வெளியே வந்த பிறகு ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு பொறுப்பில் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டாராம். பெண்கள் யாரும் இல்லாததால் அதிகமாக குரல் கொடுத்து தன்னை முன்னிலைப்படுத்தி வந்தாராம்.

இந்நிலையில் வேறு கட்சியில் இருந்து பூ நடிகை அந்த கட்சிக்கு வந்திருக்கிறாராம். பூ நடிகையின் வரவால் நடன நடிகை கலக்கத்தில் இருக்கிறாராம். தனக்கு எதாவது ஒரு பொறுப்பு கிடைக்கும் என்று பார்த்தால் இந்த நடிகை வந்துவிட்டாரா என்று கவலைப்படுகிறாராம். மேலும் வேண்டுதலுக்காக கோவிலுக்கு சென்று வருகிறாராம்.

Similar News