சினிமா
படக்குழுவினரை பதற வைத்த இளம் நடிகை
புருவ அசைவு மூலம் மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்தாராம் அந்த நடிகை. இவர் நடித்த படம் இன்னும் வெளியில் கூட வரவில்லையாம்.
புருவ அசைவு மூலம் மலையாளம் மட்டுமில்லாமல், தமிழ் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்தாராம் அந்த நடிகை. இவர் நடித்த படம் இன்னும் வெளியில் கூட வரவில்லையாம். ஆனால், நடிகைக்கு ஏகப்பட்ட வரவேற்பாம். இவரை தமிழில் நடிக்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
இந்நிலையில், ஒரு படக்குழுவினர் தங்களுடைய படத்தின் போஸ்டரை வெளியிடும் படி கேட்டுக் கொண்டார்களாம். நடிகையும் சரி என்று சொன்னாராம். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் நேரத்தில் நடிகை வெளியிட வில்லையாம். நடிகையின் போன் நம்பரை தொடர்பு கொண்டால் கிடைக்கவில்லையாம், இதனால், படக்குழுவினர் பதறிவிட்டார்களாம். பின்னர் சிறிது நேரம் கழித்து நடிகை பட போஸ்டரை வெளியிட்டாராம்.