சினிமா

சசிகலா உடன் போயஸ் கார்டனில் நடிகர் அஜித் சந்திப்பு

Published On 2016-12-27 00:16 IST   |   Update On 2016-12-27 07:35:00 IST
நடிகர் அஜித் குமார் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்துள்ளார்.
சென்னை:

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.

இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், போயஸ் கார்டனில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும், பத்திரிக்கை துறையை சார்ந்தவர்களும், தொண்டர்களும் தினமும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் போயஸ் கார்டனில் சசிகலாவை நேற்று மாலை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜித் குமார் அன்று மாலையே சென்னை வந்தார். பின்னர், ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

Similar News