சினிமா செய்திகள்
சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் இறப்பு செய்தியை கேட்டு அக்ஷய் குமார் செய்த செயல்
- 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
- சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி, காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் முக்கியமான கார் சேசிங் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்த காட்சியில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (வயது 52) ஈடுபட்டு அதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவர் உயிரிழந்ததையடுத்து பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். இந்த இன்சூரென்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை