`என்ன ஒரு அருமையான படம் கார்த்திக் சுப்பராஜ் சார்' - டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷனின் ரெட்ரோ பதிவு
- சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்று சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரான அபிஷான் ஜீவின்ந்த் ரெட்ரோ திரைப்படத்தை பார்த்து பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் "ரெட்ரோ திரைப்படம் பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம் கார்த்திக் சுப்பராஜ் சார். சூர்யா சார் நீங்கள் ஒரு மேஜிக். ஒவ்வொரு காட்சிகளிலும் திரையை மொத்தமாக தன்வசப்படுத்தி வீட்டீர்கள். சிறப்பான இசை சந்தோஷ் நாராயணன். 'ரெட்ரோ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார்.