சினிமா செய்திகள்

காலேஜ் கட் அடிச்சிட்டு படம் பாக்க போகாதீங்க - மாணவர்களுக்கு நடிகர் கவின் அட்வைஸ்

Published On 2025-11-20 17:54 IST   |   Update On 2025-11-20 17:54:00 IST
  • சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
  • ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மாணவர்களிடையே பேசிய கவின், 

"ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

Tags:    

Similar News