சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட ரிலீஸ் அப்டேட்!

Published On 2025-08-23 10:55 IST   |   Update On 2025-08-23 10:55:00 IST
  • கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார்.
  • இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைத்துள்ளார்.

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர். திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது.

Tags:    

Similar News