சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரின் அடுத்த அவதாரம்... வெளியான புது தகவல்

Published On 2025-07-05 11:58 IST   |   Update On 2025-07-05 11:58:00 IST
  • கடந்த மே மாதம் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
  • படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருப்பதால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.



இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.

முதல் படத்திலேயே பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை டூரிஸ்ட் ஃபேமிலியின் இணை இயக்குநர் இயக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக அனஸ்வர ராஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிம்பு நடித்து வெளியான 'மன்மதன்' படத்தில் உபயோகப்படுத்திய பிரபலமான ஆங்கில வார்த்தையில் படத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News