சினிமா செய்திகள்

ஆத்விக்கை கொஞ்சிய குடியரசு தலைவர் - ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சி பதிவு

Published On 2025-04-30 19:24 IST   |   Update On 2025-04-30 19:24:00 IST
  • அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
  • அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.

நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருது பெற்ற நிகழ்ச்சியின்போது, அவரின் மகன் ஆத்விக்கை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொஞ்சிய புகைப்படத்தை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், 'பொக்கிஷமான தருணம்' என ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்

Tags:    

Similar News