சினிமா செய்திகள்

தி பேமிலி மேன் சீசன் 3 டிரெய்லர் வெளியானது!

Published On 2025-11-08 11:06 IST   |   Update On 2025-11-08 11:06:00 IST
  • தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
  • தி பேமிலி மேன் 2 தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆக்ஷன் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் தொடர்களை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் இடையே தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.

இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் சீசன் - 3 டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News