சினிமா செய்திகள்
காதலியை கரம்பிடித்த தெலுங்கு நடிகர் அகில் அக்கினேனி
- திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
- நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும்.
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் அதிகாலையில் நடைபெற்றது. திருமணத்தில் சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய முறைப்படி நடந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணத்திற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள் நாகார்ஜூனா குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது பெரிய திருமணம் இதுவாகும்.
வரும் ஞாயிறு ஜூன் 8-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு சொந்தமான அன்னபூரனா ஸ்டூடியோசில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.