சினிமா செய்திகள்

மழைப் படையெடுப்பில் மலை வீழ்கிறது.. வெள்ளத்தில் மழையே மூழ்கிவிட்டது.. வைரமுத்து

Published On 2023-07-11 09:42 IST   |   Update On 2023-07-11 09:42:00 IST
  • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
  • இவர் ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை வெள்ளம் குறித்து கவிதை எழுதியுள்ளார்.

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


 




இந்நிலையில் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

இமாசலப் பிரதேசத்தின்

மழைப் படையெடுப்பில்

மலை வீழ்கிறது

அந்த வெள்ளத்தில்

மழையே மூழ்கிவிட்டது

என்ற கவிதை காட்சியாவது

கவலை தருகிறது

தீவிர மீட்சி தேவை

புவி வெப்பம் என்பது

பூமிபிளக்கும் வறட்சியும் தரும்

விலாவறுக்கும் வெள்ளமும் தரும்

உலக நாடுகளின் கவனத்திற்கு... என்று பதிவிட்டுள்ளார்.



Tags:    

Similar News