சினிமா செய்திகள்

இந்தி அகலாவிடில் தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம்- வைரமுத்து

Published On 2023-07-26 08:27 IST   |   Update On 2023-07-26 08:27:00 IST
  • கவிஞர் வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி ரசிகர்களை கவர்ந்தவர்.
  • இவர் சமூக பிரச்சினைகளுக்காக தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார்.

1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.


கவிஞர் வைரமுத்து சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், அகில இந்திய வானொலியில் இந்தி ஆதிக்கம் செலுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அகில இந்திய வானொலியின்

தமிழ் நிலையங்கள்

பல கலைஞர்கள்

தமிழ் விளைத்த கழனிகளாகும்;

கலைக்கும் அறிவுக்குமான

ஒலி நூலகங்களாகும்

அங்கே தமிழ் மொழி

நிகழ்ச்சிகள் குறைந்து

இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது

மீன்கள் துள்ளிய குளத்தில்

பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்

கண்டிக்கிறோம்

இந்தி அகலாவிடில்

அல்லது குறையாவிடில்

தமிழ் உணர்வாளர்கள்

வானொலி வாசலில்

களமிறங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.



Tags:    

Similar News