சினிமா செய்திகள்
ஷாருக்கான்
null

உலகின் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஷாருக்கான்

Published On 2022-12-22 09:11 IST   |   Update On 2022-12-22 09:43:00 IST

    பிரபல மாத இதழான 'எம்பயர்' சர்வதேச அளவில் அனைத்துக் காலங்களிலும் சிறந்து விளங்கும் உலகின் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. திரையுலக ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இதை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். இந்தப் பட்டியலில் மர்லின் மன்றோ, மார்லன் பிராண்டோ, டாம் குரூஸ், கேட் வின்ஸ்லெட், ஹீத் லெட்ஜர், லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

    ஷாருக்கான்

     

    இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெயரும் இந்த 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

    ஷாருக்கான்

     

    பாஜி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ஷாருக்கானின் நடிப்பு பயணம் தொடங்கியது 1992-ல் தீவானா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். 'தில்வாலே துல்ஹனியா லெ ஜாயங்கே' காதல் படத்தில் நடித்த பிறகு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து மளமளவென முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    ஷாருக்கான்

    தற்போது தீபிகா படுகோனேவுடன் நடித்துள்ள 'பதான்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்ற பாடல் காட்சியில் தீபிகா படுகோனே காவி நீச்சல் உடையில் நடித்தது எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இந்த படத்தை தடை செய்ய கோரி போராட்டங்கள் நடக்கின்றன.


    Tags:    

    Similar News