சினிமா செய்திகள்

விக்ரம் பட வெற்றி.. வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்

Published On 2022-06-10 08:04 GMT   |   Update On 2022-06-10 08:04 GMT
  • விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. கமல்ஹாசன், பகத்ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ்-க்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார்.

அதன்பின்னர், விக்ரம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பைக்கை கமல் பரிசளித்தார். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை கமல் பரிசளித்தார்.

சூர்யா

'விக்ரம்' திரைப்படம் தொடர்ந்து இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதன் புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

சூர்யாவின் சிறப்பு தோற்றமான ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து 'நன்றி ரோலக்ஸ் சார்' என்ற புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News