சினிமா செய்திகள்
null

வேற்றுகிரகவாசிகள் பற்றிய மர்மத்தை உடைக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படம் - கவனம் ஈர்க்கும் டீசர்

Published On 2025-12-18 10:06 IST   |   Update On 2025-12-18 10:07:00 IST
  • 79 வயதாகும் ஸ்பீல்பெர்க் 'டிஸ்க்ளோஷர் டே படத்தை இயக்கியுள்ளார்.
  • இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது சாத்தியமற்றது.

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சைன்ஸ் பிக்ஷன் புனைகதை பக்கம் திரும்பியுள்ளார்.

1982 இல் இவர் வேற்றுகிரகவாசி பற்றி இயக்கிய "E.T. தி எக்ஸ்டரா டெரஸ்ட்டியல்- " படம் உலகப் பிரசித்தம். தொடர்ந்து ஜுராசிக் பார்க் உட்பட பல்வேறு ஜானர்களில் பல கிளாசிக் படங்களை இயக்கினார் ஸ்பீல்பெர்க்.

79 வயதாகும் ஸ்பீல்பெர்க் தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' என்ற வேற்றுகிரகவாசிகள் பற்றிய சைன்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.

ஜோஷ் ஓ'கானர், எமிலி பிளண்ட், கோல்மன் டொமிங்கோ மற்றும் வயட் ரஸ்ஸல் போன்ற பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

"இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது" என்று முன்பு ஒருமுறை ஸ்பீல்பெர்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஜூன் 12, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 

Full View

Tags:    

Similar News