சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனா

நீங்கள் விரும்பினாலும்.. ஆரா என்னுடன் வர விரும்பவில்லை - ராஷ்மிகா விளக்கம்

Update: 2022-06-26 08:10 GMT
  • கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களில் கவனத்தை ராஷ்மிகா ஈர்த்தார்.
  • சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் தனது செல்ல நாய் குட்டிக்கும் விமானத்தில் செல்வதற்கு டிக்கெட் போடும்படி கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளியானது.

ராஷ்மிகா மந்தனா

இந்த செய்தி நேரடியாக ராஷ்மிகாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் குறித்து அவர் சமூக வலைத்தளத்தின் வழியே பதிலளித்துள்ளார். அட கடவுளே!! எனது அன்பு செல்வங்கள் அனைத்தும் இதுபோன்ற விசயங்களுக்கு இலக்காவது கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன்.

ராஷ்மிகா மந்தனா

ஆரா (ராஷ்மிகாவின் செல்ல நாயின் பெயர்)என்னுடன் பயணம் செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் கூட.. அது என்னுடன் பயணிக்க விரும்பவில்லை..ஆரா ஐதராபாத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளது. உங்கள் கவலைக்கு எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா, தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை என்ற படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர, ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சித்தார்த் மல்கோத்ராவின் மிஷன் மஞ்சு படத்திலும் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்படித்தக்கது.

Tags:    

Similar News