சினிமா செய்திகள்
null

இணையத்தை கலக்கும் ராய் லட்சுமியின் கவர்ச்சி வீடியோ

Published On 2023-07-11 10:33 IST   |   Update On 2023-07-11 12:00:00 IST
  • ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.
  • அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார்.

தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா' 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.



அதன்பின்னர் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவிய ராய் லட்சுமி, முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் தமிழில் வெளியான 'சிண்ட்ரெல்லா' திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் வாடி வாசல் என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.



அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News