சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலின் -வைரமுத்து

பெண்களின் சுதந்திரம் சுயமரியாதைக்கு பெருமை சேர்த்திருக்கிறார் முதல்வர் -வைரமுத்து டுவீட்

Published On 2023-03-20 14:30 GMT   |   Update On 2023-03-20 14:30 GMT
  • தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
  • குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று வரும் நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சொன்னதைச் செய்தார் முதல்வர் உரிமைத்தொகை அறிவித்துவிட்டார். சுயமரியாதையின் மறுபெயர் பணம், சுதந்திரத்தின் மறுபெயர் பணம் ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம் சுயமரியாதை இரண்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் முதல்வரை போகப் போக இதை இந்தியா பின்பற்றும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News