சினிமா செய்திகள்
null

ஜவான் படத்திற்காக தாதா சாகேப் பால்கே விருது வென்றார் நயன்தாரா

Published On 2024-02-21 04:17 GMT   |   Update On 2024-02-21 05:25 GMT
  • சிறந்த நடிகைக்கான விருது ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
  • ஜவான் படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகை விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

இதே போன்று சிறந்த நடிகர் விருது ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆக்ஷன் மற்றும் திரில்லிங் காட்சிகளை கொண்டிருந்தது. 

 


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்த படத்தில் ஷாருக் கான், நயன்தாரா மட்டுமின்றி விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.Tags:    

Similar News