சினிமா செய்திகள்

ரவீந்தர்

பண மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. அமெரிக்க வாழ் இந்தியர் பரபரப்பு புகார்

Published On 2023-06-29 13:19 IST   |   Update On 2023-06-29 13:19:00 IST
  • தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர்.
  • இவர் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சமூக வலை தளங்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர்.


முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா?, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கிளப் ஹவுஸ் என்கிற செயலி மூலமாக அறிமுகமான ரவீந்தர் என்னிடம் நன்றாக பழகினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் அவர் என்னிடம் ரூ.20 லட்சம் கடன் கேட்டார். சினிமா நடிகர் ஒருவருக்கு 'அட்வான்ஸ்' கொடுக்க வேண்டி இருப்பதாக கூறி இந்த பணத்தை என்னிடம் அவர் கேட்டார். நான் ரூ.15 லட்சம் பணம் மட்டும் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த பணத்தை 2 தவணையாக ரவீந்தரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தேன்.


இந்த பணத்தை ரவீந்தர் அவர் சொன்னபடி திருப்பி தரவில்லை. இதுபற்றி பல முறை தொடர்பு கொண்டு கேட்டும் அவர் என்னை அலைக்கழித்தார். சில நேரங்களில் அவதூறாக பேசினார். பின்னர் எனது செல்போன் அழைப்பை எடுக்காமல் பிளாக் செய்து விட்டார். ரவீந்தர் என்னிடம் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அதுபற்றி உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News