சினிமா செய்திகள்

ரசிகர்களுக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்கும் மாவீரன் படக்குழு

Published On 2023-07-11 08:54 GMT   |   Update On 2023-07-11 08:54 GMT
  • மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.
  • இப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



'மாவீரன்' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று மாலை 6.00 வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கின் 'மாவீருடு' 7.00 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News